search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய பகவான்"

    • ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இந்த அதிசய சூரிய பூஜை நடந்து வருகிறது.
    • பங்குனி மாதம் மீன் மாதமாக கருதப்படுகிறது.

    நாகலாபுரம் வேத நாராயணசுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் நடக்கும் சூரிய பூஜை மிக வித்தியாசமானதாகும்.

    பொதுவாக பழமையான ஆலயங்களில் மூலவர் சிலை மீது சூரிய கதிர்கள் படுவதை சூரிய பூஜை என்று நமது முன்னோர்கள் வகுத்து வைத்து உள்ளனர்.

    பெரும்பாலும் ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு தடவை ஏதாவது ஒருநாள் மட்டுமே மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் நிகழ்வு நடைபெறும்.

    ஆனால் இந்த தலத்தில் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு சூரிய கதிர்கள் மூலவர் மீது விழும் அதிசயம் நடக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இந்த அதிசய சூரிய பூஜை நடந்து வருகிறது.

    இத்தகைய மூன்று நாள் சூரிய பூஜை வேறு எந்த தலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பங்குனி மாதம் மீன் மாதமாக கருதப்படுகிறது.

    பெருமாள் மீன் அவதாரம் எடுத்த காரணத்தினால் இந்த மாதத்தில் இத்தகைய மூன்று நாள் சூரிய பூஜை நடந்து வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சூரியன் அடுத்தடுத்து 3 நாட்கள் தனது கதிர்களை இந்த தலத்தின் இறைவன் மீது படச் செய்வதால் அதை ஒரு அதிசய நிகழ்வாக கருதுகிறார்கள்.

    இதனால் அந்த மூன்று நாட்களும் நாகலாபுரம் ஆலயத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள், விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

    • அவரே மருத்துவர் ஆவார், அவரே மனு, வாயு, மற்றும் அக்னி,
    • பருவங்களின் காரணம் அவரே, உலகை உய்வித்து வைத்திருக்கின்ற ஒளியின் இருப்பிடம் அவரே

    இனி இந்த சூரிய தேவனுக்குரிய மிக பலம் வாய்ந்த துதியான ஆதித்ய ஹ்ருதயம் எவ்வாறு ராம பிரானுக்கு கும்ப முனி என்று அழைக்கப்படும் அகத்திய முனிவரால் எப்படி உபதேசிக்கப்பட்டது என்பதைப் பார்ப்போமா?

    யுத்த களத்திலே ராவணனை கடைசியாக எப்படி அழிப்பது என்று யோசித்துக் கொண்டு ராம பெருமாள் என்ற போது,

    பல தேவர்களுடனும், கந்தவர்களுடனும், ரிஷகளுடனும் சேர்ந்து ராம ராவண யுத்தத்தை கவனித்துக் கொண்டிருந்த

    பெரும் சிறப்பு வாய்ந்த கும்ப முனி என்று அழைக்கப்படுபவரும், அம்மையப்பரின் திருக்கல்யாணத்தின் போது

    வடக்கு திசை தாழ்ந்து தெற்கு உயர்ந்த போது உலகைச் சமப்படுத்த வந்தவருமான அகஸ்திய முனிவர், ராமனிடம் வந்து பேசத் தொடங்கினார்.

    "பெரும் தோள்வலி படைத்தவனே, ராமா! என்றுமே அழியாத ஒரு ரகசியத்தை உனக்கு உரைக்கின்றேன்.

    கேள், நான் கூறப்போவது ஆதித்ய ஹ்ருதயம் என்கிற துதி. இது சாஸ்வதமானது, புனிதமானது,

    அழிவற்றது, எல்லா பாவங்களையும், ஒழிக்க வல்லது, எல்லா எதிரிகளையும் அழிக்க வல்லது, மன குழப்பத்தையும்,

    துன்பத்தையும், வேரோடு அறுக்க வல்லது, ஆயுளை வளர்க்க வல்லது, பெறும் சிறப்பு வாய்ந்தது.

    தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவனும், உலகுக்கே ஒளி தருபவனும், தினம் தவறாமல்

    தோன்றுபவனுமான உனது இஷ்வாகு குல தெய்வமான சூரியனைப் பற்றிய துதி இது.

    உலகை மட்டுமல்லாமல் தேவர்களையும் கூட வாழ் விப்பவர் சூரிய பகவான், அவரே பிரம்மா, விஷ்ணு,

    சிவபெருமான், அவரே கந்தன், ப்ரஜாபதி, இந்திரன், குபேரன், அவரே காலன், யமன், சோமன், வருணன், அவரே அனைத்து பித்ருக்களும் ஆவார்.

    அவரே அஷ்ட வஸக்கள் ஆவாதர், அவரே மருத்துவர் ஆவார், அவரே மனு, வாயு, மற்றும் அக்னி,

    பருவங்களின் காரணம் அவரே, உலகை உய்வித்து வைத்திருக்கின்ற ஒளியின் இருப்பிடம் அவரே,

    உலகின் மூச்சுக் காற்று அவரே, என்று தொடங்கிய சூரிய பகவானின் பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டது.

    • மஹாபாரதத்தில் தர்மர் சூரிய பகவானை ஆராதித்து அக்ஷய பாத்திரம் பெற்றார்.
    • ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன், சிம்ம ராசிக்கு அதிபதி நவக்கிரகங்களின் நடுவில் இருப்பவர்.

    மஹாபாரதத்தில் தர்மர் சூரிய பகவானை ஆராதித்து அக்ஷய பாத்திரம் பெற்றார்.

    காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு அந்த காயத்ரியின் சாராம்சம் தியானத்திற்குரிய சூரிய பகவானுடைய ஒளி எங்கள் உள்ளத்தில் புகுந்து சிந்தனைகளை தூண்டி விடுவதாகும்.

    ஸ்ரீயாக் ஞவல்க்ய மஹரிஷி தான் அருளிச் செய்த ஸ்ரீ சூர்ய கவச தோத்திரத்தில் "தினமணியானவன்" இரட்சிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

    ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன், சிம்ம ராசிக்கு அதிபதி, நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர் இவர்.

    இவருக்கு

    அதி தேவதை-அக்னி,

    பிரத்யதி தேவதை-ருத்திரன்,

    தலம்-சூரியனார் கோவில்,

    நிறம்-சிவப்பு,

    வானம்-ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்,

    தான்யம்-கோதுமை,

    மலர்-செந்தாமரை,எருக்கு,

    வஸ்திரம்-சிவப்பு,

    ரத்தினம்-மாணிக்கம்,

    அன்னம்-கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்.

    • உஷா மற்றும் பிரதியுஷா (சாயா) தேவிகளுடன் சூரியன் வணங்கப்படுகின்றார்.
    • நமக்கு உணவும், உயிரும் தர தினமும் உதயமாவதாகவும் கருதப்படுகின்றது.

    நவகோள்களின் நாயகனாக விளங்குபவவர் சூரியன்.

    இவர் ஆதித்யன், பாஸ்கரன், திவாகரன், பாலு, ரவி, பிரபாகரன், பரிதி, கதிரோன், வெய்யோன் என்று பல திருநாமங்களல் அழைக்கப்படுகின்றார்.

    உஷா மற்றும் பிரதியுஷா (சாயா) தேவிகளுடன் சூரியன் வணங்கப்படுகின்றார்.

    தமிழ் நாட்டிலே பொங்கல் பண்டிகை நல்ல விளைச்சலுக்கு காரணமான சூரிய தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே கொண்டாடப்படுகின்றது.

    பெளதீக சாஸ்திரப்படி சூரியன் மஹா கொதி நிலையில் உள்ள வாயுக்கள் நிரம்பிய கோளமாகும்.

    நமக்கு உணவும், உயிரும் தர தினமும் உதயமாவதாகவும் கருதப்படுகின்றது.

    சூரியன் இல்லையென்றால் தாவரங்கள் என்று சொல்லப்படும் உணவு தயாரிப்பது இல்லை, தாவரங்கள் இலையென்றால் மான், மாடு முதலிய மிருகங்கள் இல்லை.

    இம்மிருகங்கள் இல்லை. எனவே சூரிய ஒளியே உலகில் உயிர்களுக்கு ஆதாரம்.

    ஆயிரம் கிரணங்களுடன் நம்மை உதய நேரத்தில் பிரம்மா ரூபத்திலும், உச்சிப் போதில் பரமேஸ்வர ரூபத்திலும், அஸ்தமன மாலை நேரத்தில் விஷ்ணு ரூபமாகவும் காப்பதாக ஐதீகம், காலை மற்றும் மாலை சூரியன் கதிரில் விட்டமின் டி இருப்பதாக விஞ்ஞானமும் கூறுகின்றது.

    • “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்கின்றது சிலப்பதிகாரம்.
    • இன்றும் சிவாலயங்கள் அனைத்திலும் நவ கிரக வழிபாடு உள்ளது.

    "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என்கின்றது சிலப்பதிகாரம்.

    சூரிய வழிபாடு பண்டைக்காலத்திலிருந்தே நமது பாரத நாட்டில் இருந்துள்ளது.

    கிழக்கிலே கொனார்க்கிலும், மேற்கிலே மொட்டோராவிலும் தெற்கிலே சூரியனூர் கோவிலும் அமைந்துள்ள சூரியர் கோவில்களே இதற்கு சான்றுகள்.

    சனாதன தர்மமான இந்து மதத்தை அறு சமயங்களாக வகுத்துக் கொடுத்த ஆதிசங்கர பகவத் பாதாளும் சூரிய வழிபாட்டை சௌரமாக வகுத்துக் கொடுத்தார்.

    இன்றும் சிவாலயங்கள் அனைத்திலும் நவ கிரக வழிபாடு உள்ளது.

    • உஷாதேவியை ஒரு பாகமாக கொண்டு திகழ்கிறார் சூரிய பகவான்.
    • இவ்வுருவையே “மார்த்தாண்ட பைரவர்” என்று நூல்கள் கூறுகின்றன.

    உமையொருபாகனாக சிவபெருமான் போல, லக்ஷ்மி பாகனாகத் திகழும் விஷ்ணு போல, உஷாதேவியை ஒரு பாகமாக கொண்டு திகழ்கிறார் சூரிய பகவான்.

    எந்த உஷாதேவி சூரியனின் முன்னர் வெளிப்பட்டு உலகின் இருளை அகற்றுகிறாளோ அவளையே தனது அருள் சக்தி வடிவாகக் கொண்டு சூரிய நாராயணன் நமது அஞ்ஞானமான இருளை அழித்து ஒளிமயமான அறிவாக கவிதையாக மலர்வதைத் தான் இவ்வுருவம் சித்தரிக்கிறது.

    இவ்வுருவையே "மார்த்தாண்ட பைரவர்" என்று நூல்கள் கூறுகின்றன.

    இதுவே உன்னதத் தத்துவம், கண்கண்ட தெய்வமான சூரியனினும் ஆணும், பெண்ணுமாக இணைந்த உருக்கொண்டு அருள் பாலிக்கும் பாங்கை பொங்கல் திருநாளில் நினைவில் நிறுத்தலாமே.

    • கும்பகோணத்துக்கு அருகில் தாராசுரம் என்ற கோவில் இருக்கிறது.
    • நாம் அந்த கோவிலுக்குள் நுழைந்ததும் கண்ணில் படுவது அர்த்தநாரி உருவம்.

    கும்பகோணத்துக்கு அருகில் தாராசுரம் என்ற கோவில் இருக்கிறது.

    அதை இரண்டாம் ராஜராஜசோழன் கி.பி.1165 வாக்கில் கட்டினான்.

    அது சாக்த மரபை பிரதிபலிக்கும் கோவிலாகத் திகழ்கிறது.

    நாம் அந்த கோவிலுக்குள் நுழைந்ததும் கண்ணில் படுவது அர்த்தநாரி உருவம்.

    அதைப் பார்த்ததும் சிவபெருமான் அர்த்தநாரியாகத் திகழ்வதைத் தான் நினைவூட்டும்.

    இது என்ன மாயை என்று தோன்றும். ஆனால் அதை ஆராய்ந்த போது ஒரு உண்மை தெரிந்தது.

    தாராசுரம் கோவிலில் பல தெய்வச் சிலைகள் உள்ளன. அதில் காவி வண்ணத்தில் அத் தெய்வங்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

    சோழர் கால கிரந்த எழுத்துக்களில் இப்பெயர் உள்ளது.

    இந்த அர்த்தநாரியின் உருவத்தின் மேலும் எழுத்து மங்கிய நிலையில் இன்றும் உள்ளது.

    அதிலிருந்து இது சூரியனுடைய உருவம் என்பதே ஆகும். மூன்று தலைகள் உள்ளன.

    தலை யின் பின்புறம் சூரியனுடைய பிரபை வலப்பகுதி ஆணாகவும் இடப் பகுதி பெண்ணாகவும் உள்ளது.

    ஒரு வலது கரத்தில் தாமரை உள்ளது.

    ஆம் தமிழ்நாட்டிலேயே அர்த்தநாரி சூரியனை சோழர் காலத்தில் சோழ பேரரசர்களும் மக்களும் வணங்கியுள்ளனர்.

    சூரியனை இவ்வாறு வணங்கும் மரபு உண்டாம்.

    • தமிழ்நாட்டில் முதலாம் குலோத்துங்கன் சூரியனார் கோவிலை கட்டினான்.
    • ஆனால் சூரியன் உருவமும் வழிபாடும் வளர்ந்த பின்னிலையில் தான் இது கட்டப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் முதலாம் குலோத்துங்கன் சூரியனார் கோவிலை கட்டினான்.

    இது ஒரு சிறிய கோவில் தான்.

    ஆனால் சூரியன் உருவமும் வழிபாடும் வளர்ந்த பின்னிலையில் தான் இது கட்டப்பட்டுள்ளது.

    சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோவில் எனும் சிறப்பை சூரியனார் கோவில் பெற்றுள்ளது.

    ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தில் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.

    சூரியனார் கோவில் வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் செல்வம் கொழிக்கும், உடல் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.

    • புகழ் பெற்ற ஒரு கோவில் கலிங்கத்தின் கடற்கரை ஓரத்தில் கோனார்க்கில் உள்ள சூரியன் கோவில்.
    • சோழராட்சி தமிழகத்தில் முடிவடையும் கட்டத்தில் அக்கோவில் அங்கு எழுந்தது.

    புகழ் பெற்ற ஒரு கோவில் கலிங்கத்தின் கடற்கரை ஓரத்தில் கோனார்க்கில் உள்ள சூரியன் கோவில்.

    அந்த கோவிலில் உள்ள கர்ப கிரஹத்தின் மேல் விமானம் இடிந்து விட்டது.

    கலிங்கதேச விமானம் போல் தான் அதுவும் இருந்திருக்க வேண்டும்.

    மிகப்பிரம் மாண்டமான அந்த கோவிலைக் கீழை கங்க அரசன் நரசிம்மதேவன் என்பவன் கி.பி.1250ல் கட்டினான்.

    சோழராட்சி தமிழகத்தில் முடிவடையும் கட்டத்தில் அக்கோவில் அங்கு எழுந்தது.

    • சைவமும், வைணவமும் இந்தியாவில் சிறந்து திகழ்வது போல சூரிய வழிபாடும் திகழ்கிறது.
    • புகழ் வாய்ந்த சூரியன் கோவில்களில் இந்த மார்த்தாண்டர் கோவிலும் ஒன்று.

    சைவமும், வைணவமும் இந்தியாவில் சிறந்து திகழ்வது போல சூரிய வழிபாடும் திகழ்கிறது.

    சூரியனை முழு முதற்கடவுளாக வணங்கும் வழிபாடு சௌசரம் எனப்படும்.

    இந்தியாவின் பல இடங்களில் சூரியனுக்கு பெருங்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

    காஷ்மீரத்தில் லலிதா தித்ய முக்தி பாதன் என்ற அரசன் கட்டிய "மார்த்தாண்டர்" கோவில் சூரியனுக்கு கட்டப்பட்டது.

    கி.பி.750ல் அதாவது தமிழ்நாட்டில் பல்லவர் ஆண்ட காலத்தில் அது கட்டப்பட்டது.

    அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்ததாக வரலாறு கூறுகிறது.

    கி.பி.1090ல் அங்கு ஆண்ட கலசன் என்ற அரசன் அங்கு இருந்த சூரிய பகவானுடைய செப்புத்திரு மேனியை உடைத்தான்.

    இதனால் அவன் நோய் வாய்ப்பட்டான். பின்னர் தங்கத்தில் சூரியன் உருவம் செய்து இக்கோவிலில் வைத்தான்.

    இருந்தாலும் அவன் நோய் வாய்ப்பட்டான்.

    ஆதலால் தன்னை இத் தெய்வத்தின் காலடியில் கொண்டுவிட கேட்டுக்கொண்டான்.

    கோவிலில் சிலையின் காலடியில் இவனை வைத்ததும் அங்கேயே இறந்து போனான் என்று வரலாறு கூறுகின்றது.

    புகழ் வாய்ந்த சூரியன் கோவில்களில் இந்த மார்த்தாண்டர் கோவிலும் ஒன்று.

    • சூரியன் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை.
    • சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு.

    சூரியன் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை.

    கர்ம வினைக்குத் தக்கபடி மாற்றத்தை ஏற்படுத்துவான்.

    பலவாறான கர்ம வினைகள் எனவே, மாறுபட்ட கிரகங்களின் துணை அவனுக்குத் தேவை.

    பூமியில் விளையும் பயிர்கள் பலவிதம், அதற்கு விதையின் தரம் காரணம்.

    கண்ணுக்கு இலக்காகாத கர்வினையின் தரத்தை வெளிக் கொண்டு வருபவன் சூரியன்!

    ஞாயிற்றுக் கிழமை, சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள்.

    விண்வெளியில் சூரியனின் ஓடுபாதை, நடுநாயகமாக விளங்குகிறது.

    சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி இப்படி முன்னும் பின்னுமாக இருக்கிற எல்லா கிரகங்களையும், தனது கிரணத்தால் செயல்பட வைத்து உலக இயக்கத்தைச் செம்மைப்படுத்துகிறான், சூரியன்.

    "ஸ"ம் ஸ ர்யாயநம" என்று சொல்லி 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு.

    சூரிய நமஸ்காரம் 12 முறை செய்ய வேண்டும்.

    • ஆன்ம பலத்தில் மனம் வலுப்பெற்றால், எல்லா இன்னல்களில் இருந்தும் விடுபடுவது எளிது.
    • அந்த மனோ பலத்தை சூரியனிடமிருந்து பெற வேண்டும்.

    ஆன்ம பலத்தில் மனம் வலுப்பெற்றால், எல்லா இன்னல்களில் இருந்தும் விடுபடுவது எளிது.

    மகான்கள் மனோபலம் மற்றும் ஆன்ம பலத்தால் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.

    அந்த மனோ பலத்தை சூரியனிடமிருந்து பெற வேண்டும்.

    சந்திரன், சூரியனிடமிருந்து பலம் பெறுகிறான்.

    தேசத்தோடு இணைந்து பிறந்தவனின் வேளை (லக்னம்) சூரியனை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

    வாரம், திதி நட்சத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்து கால அளவுகளுக்கு சூரியனின் பங்கும் உண்டு.

    ஆன்ம சம்பந்தம் இல்லாத உடலுறுப்புகள், இயங்காது.

    நேரடியாகவோ பரம்பரையாகவோ ஆன்மகாரகனின் சம்பந்தமின்றி, கிரகங்கள் இயங்காது.

    ×